Latest

10/recent/ticker-posts

AIBDPA வேலூர் மாவட்ட விரிவடைந்த செயற்குழு கூட்டம்

 AIBDPA வேலூர் மாவட்ட விரிவடைந்த செயற்குழு






         வேலூர் மாவட்ட AIBDPA சங்கத்தின் விரிவடைந்த மாவட்டச் செயற்குழுக் கூட்டம் இன்று 19.05.2025ல் வேலூரில் சிறப்பக நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில், சங்க கொடியினை மாநிலச் செயலர் தோழர் R. ராஜசேகர் அவர்கள் ஏற்றி வைத்தார். பின்னர் துவங்கிய விரிவடைந்த மாவட்டச் செயற்குழுவுக்கு மாநிலத் தலைவரும் மாவட்டத் தலைவருமான தோழர் C. ஞானசேகரன் தலைமை வகித்தார். தோழர் மோனிபோஸ் அவர்களின் நாற்றாண்டு பிறந்தநாளை ஒட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலர் தோழர் முருகன் வரவேற்புரை ஆற்றி மாவட்ட சங்கத்தின் செயல்பாட்டு அறிக்கையினை சமர்ப்பித்தார்.  மாவட்ட ஆலோசகர் தோழர் மணி அவர்கள் துவக்க உரையாற்றினார். மாநில சங்க துணைப் பொருளாளர் தோழர் P சரவணன் மற்றும் கௌரவத் தலைவர் தோழர் V. ஏழுமலை அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். 

.         மாநிலச் செயலாளர் தோழர் R ராஜசேகர் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்..நமது ஓய்வூதிய மாற்றம், சர்வதேச நிலைமை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஓய்வூதியர் சட்ட விதிமுறைத் திருத்தம், பஹல்ஹாம் தாக்குதல், கூட்டுறவு சங்க வழக்கு, ஓய்வூதியர் முழக்கம் இதழ் வெளியீடு தொடர்பான பல்வேறு தகவல்களைப் பற்றி விரிவாகப் பேசினார்.

          BSNL ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் தோழர் B.மாரிமுத்து வாழ்த்துரை வழங்கினார். உணவு இடைவேளைக்குப் பிறகு மாவட்டப் பொருளாளர்  தோழர் பொன்.லோகநாதன் அவர்கள் நிதிநிலை அறிக்கை வாசித்தார். பின்னர் கிளைச் செயலாளர்கள் உரையாற்றினர். 

          மாவட்டத் தலைவர் தோழர் C.ஞானசேகரன் அவர்கள் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றதால் அவருக்கு பதில் மாவட்டத் தலைவராக தோழர்  C. தங்கவேல் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மாவட்டச் செயலரின் பதிலுரைக்குப் பிறகு, புதிய மாவட்ட தலைவர் தோழர் தங்கவேல் அவர்கள் உரையாற்றி நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.

 மாவட்டத்தின் அனைத்து கிளைகளில் இருந்தும் கிளைச் செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் என சுமார் 70 தோழர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும், செயற்குழு சிறப்பாக நடைபெற உழைத்த தோழர்களுக்கும் மாவட்டச் சங்கத்தின் நன்றி.

தோழமையுடன்,
ப. முருகன் 
மாவட்டச் செயலர். AIBDPA 
வேலூர் மாவட்டம்.

Post a Comment

0 Comments