Latest

10/recent/ticker-posts

AIBDPA TN அன்னையர் தினம் 11.5.25

 AIBDPA TN  அன்னையர் தினம் 11.5.25



அன்னை எனும் அற்புதம்...


நடமாடும் ஆலயமானவள்...

நடமாட உதிரம் தந்தவள்...

தொப்புள் கொடி மூலம் தோற்றுவித்தவள்...


தோள்களை எனக்கெனவே ஒதுக்கீடு செய்தவள்...

கருணையின் கருவரையானவள்...

கற்பித்தலின் ஆதியானவள்...


தனக்கென வாழா தயாபரியானவள்...

தனக்குள் எல்லாம் அடைத்துக் கொண்டவள்...


சுமையையும் சுகமென சுகிர்த்துக் கொள்பவள்...

எனக்கென வாழும் என்னுயிரானவள்...


அன்னைக்கு ஈடென்பது அகிலத்தில் இல்லை...

அன்னையின் அடி தொழாது உய்வதுமில்லை...


அன்னையர் தின வணக்கங்களுடன்,


சரவணன்✍️ 
மாநில உதவி பொருளாளர்
AIBDPA TN

Post a Comment

0 Comments