வெகுசிறப்பாக நடைபெற்ற திருச்சி மாவட்ட விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் 21/09/2024.
தோழர்களுக்கு வணக்கம் !
21/09/2024 சனிக்கிழமை அன்று திருச்சி GM அலுவலக மாடியில் உள்ள கான்பரன்ஸ் ஹாலில் நடைபெற்ற AIBDPA திருச்சி மாவட்ட விரிவடைந்த செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் தோழர். I. ஜான் பாட்ஷா தலைமையில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்த விரிவடைந்த மாவட்ட செயற்குழுவில் மாநில செயலாளர் தோழர் R. ராஜசேகர் அவர்களும், மாநிலப் பொருளாளர் தோழர் S. நடராஜா அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் மாநில சிறப்பு அழைப்பாளர் மதுரையை சேர்ந்த தோழர் M. செல்வராசன் அவர்களும் கலந்துகொண்டு கருத்துக்களை பரிமாறினார்
இந்த விரிவடைந்த மாவட்ட செயற்குழுவில் AIBDPA மாநில மாநாட்டை திருச்சியில் நடத்துவது, என்று ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிறகு மாநில மாநாட்டிற்கான வரவேற்பு குழு அமைக்கப்பட்டது.
தலைவர் : தோழர்.I.ஜான்பாட்ஷா,
துணைத்தலைவர் : தோழர். T. தேவராஜ் ,
பொதுச்செயலாளர் : தோழர். A.இளங்கோவன்,
இணைச் செயலாளர்- தோழர். K. சின்னைய்யன்,
பொருளாளர் : தோழர். L. அன்பழகன்
ஆகியோர் அடங்கிய வரவேற்பு குழு அமைக்கப்பட்டது.
பின்னர் இன்னும் விரிவடைந்த வரவேற்புக்குழுவினை விரைவில் அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக விரிவடைந்த மாவட்ட செயற்குழுவில், தோழர். A. இளங்கோவன் மாவட்ட செயலாளர் (பொறுப்பு) அவர்கள், வரவேற்புரை நிகழ்த்தி இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தார்.
கிளைச் செயலாளர்கள் தலமட்ட பிரச்சினைகளை எடுத்துரைக்க மாநில செயலாளர் பதில் அளித்து விளக்கமான உரை நிகழ்த்தினார்.
இறுதியாக மாவட்ட செயலாளர் தோழர். K. சின்னயன் அவர்கள் நன்றி கூறி விரிவடைந்த மாவட்ட செயற்குழுவினை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,தோழர். A. இளங்கோவன்
மாவட்ட செயலாளர் (பொறுப்பு) AIBDPA.
திருச்சிமாவட்டம்
0 Comments