Latest

10/recent/ticker-posts

தோழர். T. பழனி Retd STS (ACS AIBDPA) மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி !!

 தோழர். T. பழனி  Retd STS (ACS AIBDPA)மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி !!

         AIBDPA தமிழ் மாநில உதவிச்செயலர் அருமைத் தோழர். T. பழனி  Retd STS அவர்கள் உடல்நிலை கோளாறு காரணமாக இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

              ஒன்றுபட்ட தபால் தந்தி இயக்கமான NFPTE காலம் தொட்டு KG போஸ் அணியோடு தன்னை இணைத்துக் கொண்டு இயக்கப் பணியாற்றிய அற்புதமான தோழர். T. பழனி அவர்கள் இன்று நம்மோடு இல்லை. டெலிகாம் துறையாக மாறிய பிறகு NFTE E3, E3 (N) அமைப்புகளிலும், BSNLEU உருவான பின்னர் அதிலும் இயக்கத்தை சேலம் நகரப் பகுதியில் வளர்த்தெடுக்க பாடுபட்ட சிறந்த தோழர். பணி ஓய்வு பெற்ற பின்னரும் AIBDPAவில் தன்னை இணைத்துக் கொண்டு இயக்கப் பணியாற்றினார்.

              23.8.2024 அன்று நடைபெற்ற AIBDPA மாவட்ட செயற்குழுவில் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் மருத்துவரை பார்த்துவிட்டு வந்து கலந்து கொண்டுள்ளார். இதுவே இயக்கத்தின் மீது அவருக்குள்ள மிகுந்த அக்கறையை காட்டுகிறது. யாரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவரது இறப்பு செய்தி வந்துள்ளது நம்மையெல்லாம் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

AIBDPA மாநில, மாவட்ட சங்கங்களின் சார்பில் தோழர். T. பழனி அவர்களுக்கு செங்கொடி தாழ்த்திய அஞ்சலியை உரித்தாக்குகின்றோம். தோழர் T. பழனி அவர்கள் காட்டிய இடதுசாரிப் பாதையில் இயக்கத்தை முன்னெடுக்க சபதம் ஏற்போம்.

தோழர் T. பழனி நாமம் வாழ்க.

குறிப்பு: இறுதி நிகழ்ச்சிகள் ஆத்தூர் ரயில்வே நிலையம் தென்புறம் உள்ள தமிழ்நாடு ஹவுசிங் போர்டு புதிய பார்க் அருகிலுள்ள அவர்களது வீட்டில் இன்று 31.8.2024 மாலை 5 மணியளவில் நடைபெறும்.

Post a Comment

0 Comments