Latest

10/recent/ticker-posts

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை கிளையின் மாதாந்திர கூட்டம்

 வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை கிளையின் மாதாந்திர கூட்டம் 

தோழர்களே !!

.                 வேலூர்  மாவட்டம் இராணிப்பேட்டை கிளையின் மாதாந்திர கூட்டம் இன்று (06.07.2024) அன்று இராணிப்பேட்டை தொலைபேசி நிலைய அலுவலக வளாகத்தில் தோழர். பெருமாள்சாமி DGM Rtd அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கிளைச்செயலாளர் தோழர் ரகுபதி வரவேற்புரையாற்ற, மாவட்ட செயலாளர் தோழர் வி ஏழுமலை அவர்கள் மாநில செயற்குழு குறித்தும் மாவட்ட மாநாடு பற்றியும் இதர பிரச்சினைகள் குறித்தும் உரையாற்றினார். 

            கிளை உறுப்பினர்கள் தோழர் ராமதாஸ், தோழர் ஜெயசீலன், தோழர் ரவீந்திர குமார் ஆகியோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். கிளைச் சங்கத்தின் சார்பில் மாவட்ட மாநாட்டு நிதியாக ரூ.2000  முதல் தவணையாக தரப்பட்டது. 

            இறுதியில் தோழர் S. இராமமூர்த்தி DOS அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவுற்றது. தவறாமல் கிளைக் கூட்டம் நடத்தும் இராணிப்பேட்டை கிளைக்கு வாழ்த்துக்கள். 

தோழமையுள்ள
 வி. ஏழுமலை 

மாவட்ட செயலாளர்.

Post a Comment

0 Comments