Latest

10/recent/ticker-posts

உற்சாகமாக நடைபெற்ற வேலூர் கிளையின் பொதுகுழு கூட்டம்

 உற்சாகமாக நடைபெற்ற வேலூர் கிளையின் பொதுகுழு கூட்டம்




தோழர்களே !!

                 வேலூர் கிளையின் கூட்டம் தோழர். சங்கரன் அவர்கள் தலைமையில் இன்று (03.07.2024) காலை 10.30 மணியளவில் சிறப்பாக   துவங்கியது. கிளைச் செயல்பாடுகள் பற்றி கிளைச் செயலாளர் தோழர் G. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எடுத்துரைத்தார். 

              வரும் 07.08.2024 அன்று நடைபெறவுள்ள மாவட்ட மாநாடு குறித்தும், தீர்க்கப்பட்ட பிரச்சினைகள் குறித்தும், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் மாவட்ட செயலாளர் தோழர். வி. ஏழுமலை பேசினார். இன்றைய அரசியல் சூழல் மற்றும் சங்க செயல்பாடுகள் குறித்து தோழர் C. ஞானசேகரன் அவர்களும், பாண்டிச்சேரி மாநில செயற்குழு நிகழ்ச்சிகள் குறித்து தோழர் பொன் லோகநாதன்,மாநில துணைத் தலைவர் அவர்களும் பேசினர். 

கிளைச் செயல்பாடுகள் குறித்து தோழர் ப. முருகன் பேசினார். இறுதியில் தோழர் கிருஷ்ணமூர்த்தி கிளைப் பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவுற்றது. 

எட்டு தோழியர்கள் உட்பட சுமார் 70 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கிளையின் சார்பாக மாநாட்டு நன்கொடையாக ரூ. 10000 வழங்கப்பட்டது. கிளைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி. 

தோழமையுள்ள
G. கிருஷ்ணமூர்த்தி. 
கிளைச் செயலாளர்

வேலூர்.

Post a Comment

0 Comments