Latest

10/recent/ticker-posts

தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை எண் : 8/2024 dt.23.7.24

 தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை எண் : 8/2024 dt.23.7.24

மாவட்டச் செயலர்கள் கூட்டம் 23.7.24




தோழர்களே !!

             நமது மாநில சங்கத்தின் மாவட்ட செயலர்கள் கூட்டம் இணைய வழியாக (Google meet online) 23.07.2024 அன்று மாநில  தலைவர் தோழர். C.K. நரசிம்மன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 15 மாவட்ட செயலாளர்கள் உட்பட 36 பேர் பங்கேற்றனர். 

விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளும் எடுக்கப்பட்ட முடிவுகளும்

1) BSNL MTNL  ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு போராட்ட அறைகூவல்

          இதன் சார்பாக நடைபெறும் சென்னை CCA அலுவலக பெருந்திரல் போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் கோட்டா தரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டங்கள் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ளும் தோழர்களுக்கு உணவும், காலை குளிப்பதற்கான இட ஏற்பாடும் செய்து கொடுக்கப்படும். 

நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மகஜர் கொடுப்பது.

2) 12.11.24 டெல்லி பேரணி

 டில்லி பேரணியிலும் நாம் கடந்த 2022/23 ஆண்டுகள் போல நாம் சக்தியாக திரட்டும் வகையில் மாவட்டங்களுக்கு கோட்டா தரப்பட்டுள்ளது. அதனையும் தோழர்கள் முழுமையாக அமல்படுத்திட வேண்டும். 

3) NCCPA போராட்டம் 

NCCPA  அறிவித்துள்ள இரண்டு கட்டப் போராட்டம்.

 A). CGHS பிரச்சனைகளுக்காக : 

6.8.24 அன்று Addl Director CGHS Besant Nagar அலுவலகம் முன் நடைபெறும் ஆர்ப்பாட்டம். 

B) பிறகு பென்ஷன் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக மாவட்ட வட்டங்களில் 

13.9.24  

C) மாநில மட்டத்தில் சென்னையில் மத்திய அரசு அலுவலகம் முன் 25.9.24 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டம் 

D) இறுதியாக இரண்டையும் இணைத்து டெல்லியில் 13.11.24 அன்று நடைபெறும் டெல்லி  போராட்டம். 

தோழர்களே இந்த அத்துணை போராட்டங்களையும் நாம் முழுமையாக வெற்றிகரமாக நடத்திட வேண்டும். 

4) நம்முடைய JF டெல்லி பேரணி இயக்கம் 12.11.24

NCCPA டெல்லி பேரனி 13.11.24.

ஆகவே டெல்லிக்கு வரும் தோழர்கள் இரண்டு இயக்கங்களிலும் கலந்து கொள்ளும் வகையில் திட்டமிட வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறோம். 


1)மாவட்டம்..     2)CCA அலுவலக பேரணி...       3)டெல்லி பேரணி. 

(1)                                        (2)                                                 (3).

கோவை                                    20                                             20 

ஈரோடு ..                                   15                 ..                          15  

வேலூர்                                      30                                             15 

சேலம்                                         15                                              10 

மதுரை                                        10                                               5 

சென்னை                                   30                                              5 

கடலூர்..                                       20 ..                                           5 

பாண்டிச்சேரி                            20                                             3 

தர்மபுரி                                         10                                              5 

நாகர்கோவில்                           5                                               5 

திருநெல்வேலி                         5                    .                          5 

தூத்துக்குடி                                  5 ..                                           5 

விருதுநகர்                                   5..                                            5 

குன்னூர்..                                      5                                             5 

திருச்சி                                            5                                             5 

கும்பகோணம்..                          5 .                                           5 

காரைக்குடி                                    5 .                                            2 

தஞ்சாவூர்                                        5                                              2 

5) சங்க உறுப்பினர் சேர்ப்பு

அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு தினந்தோறும் நிகழ்ச்சியாக மாவட்ட சங்கங்கள் அமல்படுத்துகிறார்கள்

 இது அனைத்து மாவட்டங்களிலும் சீராக நடைபெற வேண்டுமென மாநில சங்கம் வலியுறுத்தியது.

6) மாவட்ட மாநாடுகள்

ஐந்து மாநாடுகள் முடிந்து விட்டன. தர்மபுரி, ஈரோடு, கும்பகோணம், திருநெல்வேலி, விருதுநகர்.

மேலும் 7 மாவட்டங்கள் சேலம், வேலூர், கடலூர், குன்னூர், பாண்டிச்சேரி, நாகர்கோயில், கோயம்புத்தூர் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்கள் மாநாடு நடத்துவதற்கு திட்டமிட வேண்டும். 

6) மாநில மாநாடு குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். 

7) NCCPA  மாவட்ட அமைப்புகள் உருவாக்குதல்

 சென்னை, திண்டுக்கல், கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களுக்கான நமது சங்கப் பொறுப்பாளர்களை மாவட்ட செயலர்கள் தெரிவிக்க வேண்டும். 

8) NCCPA மாநில மாநாடு

நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது முடிவான பிறகு அறிவிக்கப்படும்.

9) CGHS க்கு மாறும் தோழர்களுக்கு

அது சம்பந்தமான முழுமையான புரிதலை கொடுக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கும், மாநில சங்க நிர்வாகிகளுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 1,000/ ரூபாய் FMA மட்டும் கிடைத்தால் போதும் என்ற அடிப்படையில் மாறி விடுகிறார்கள். ஏனைய சலுகைகளை, மருத்துவ வசதிகளை அவர்கள் பெறுவதில்லை. இது தொடர்பாக முழுமையான புரிதல் அவர்களுக்கு தரப்பட வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

10) LPD பிரச்சனை

இப்பிரச்சினையை மாநில சங்கம் தொடர்ந்து எடுத்து வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டது. 

இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 15 மாவட்ட செயலர்களும் 10 மாநில நிர்வாகிகளும் கருத்துக்களை முன்வைத்தனர். 

           மத்திய சங்க துணைப் பொருளாளர் தோழியர்.  வி. சீதாலட்சுமி அவர்களும் அமைப்புச் செயலாளர் தோழர். வி. வெங்கட்ராமன் அவர்களும் மத்திய சங்கத்தின் சார்பாக கருத்துக்களை முன்வைத்து மாவட்ட செயலர் கூட்டத்தை வாழ்த்தினார்கள். மத்திய சங்க துணை தலைவர் தோழர் மோகன் தாஸ் கூட்டத்தில் கலந்து கொண்டார். தொழில்நுட்ப பிரச்சையின் காரணமாக அவரால் உரையாற்ற முடியவில்லை. 

கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

இறுதியாக மாநில துணைச்செயலாளர் தோழர். C. ஞானசேகரன் நன்றி உரை வழங்கினார். 

கூட்டத்திற்கான இணைய இணைப்பை தோழர். P. ராமர் ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி. 

எடுக்கப்பட்ட முடிவுகளை கறாராக அமல்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்தில் திட்டமிடுவோம்.

தோழமை வாழ்த்துக்களுடன் 
ஆர் . ராஜசேகர்
மாநிலச் செயலாளர்

23.7.24.

Post a Comment

0 Comments