Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற தூத்துக்குடி ( மேற்கு) பகுதி கிளை பொதுக்குழு கூட்டம்.

 சிறப்பாக நடைபெற்ற தூத்துக்குடி ( மேற்கு)  பகுதி கிளை பொதுக்குழு கூட்டம்


அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.

                    AIBDPA தூத்துக்குடி மேற்கு பகுதி கிளை பொதுக்குழு கூட்டம் இன்று 28-06-2024  காலை 1100 மணி அளவில் கிளைத் தலைவர் தோழர். சுவாமி பரமஹம்சர் தலைமையில் BSNLEU மாவட்ட சங்கத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. அஞ்சலி மற்றும் வரவேற்புரையினை கிளைச் செயலர் தோழர். S. தளவாய் பாண்டியன் நிகழ்த்தினார்.

               கிளையின்  பொதுக்குழுவை துவக்கிவைத்து  மாவட்டச் செயலர்  தோழர். P. ராமர் விரிவான  உரையாற்றினார். அவர் தனது உரையில் 19-06-24ல் புதுச்சேரியில் நடைபெற்ற  மாநில செயற்குழு முடிவுகளை விளக்கினார். மேலும்  ஓய்வூதிய மாற்றம் கோரி MTNL BSNL ஓய்வூதிய சங்கங்களின் கூட்டு போராட்டம், NCCPA (TUI P&R) மாநாடு, இயக்கம், நாடாளுமன்ற தேர்தல், மருத்துவ அட்டை மறு மதிப்பீடு சம்பந்தமாகவும், ஓய்வூதியர் தரைவழி தொலைபேசி சம்பந்தமாகவும் விளக்கினார். தோழர்களின் சந்தேகங்களுக்கு பதில் கூறினார்.

               மாவட்ட பொருளாளரும் மாநில நிர்வாகியுமான தோழர் கணேசன் தனது வாழ்த்துரையில் MTNL BSNL ஓய்வூதிய சங்கங்களின் கூட்டு இயக்கங்களை பலப்படுத்த தோழர்கள் பெருவாரியாக பங்களிப்பை செலுத்துவதோடு செலவினங்களை ஈடுகட்ட தாராள நிதியுதவியை வழங்கிட கேட்டுக் கொண்டார்.

 20க்கும் மேற்பட்ட தோழர்களின் பங்களிப்போடு நடைபெற்ற கூட்டத்தின் நிறைவாக கிளை பொருளாளர் தோழர். A. அரிகிருஷ்ணன் நன்றிகூறி நிறைவு செய்தார்.

தோழமையுடன்
தோழர்.S. தளவாய் பாண்டியன், 
கிளைச் செயலர்

தூத்துக்குடி மேற்கு பகுதி கிளை

Post a Comment

0 Comments