AIBDPA புதுச்சேரி மாவட்டம்பொதுக்குழு கூட்டம்
AIBDPA புதுச்சேரி மாவட்டம் 05.06.24.
தோழர்களே தோழியர்களே !!
. நமது மாவட்ட சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வில்லியனூர் கிளை உட்பட கடந்த 03.06.24 அன்று மாவட்ட தலைவர் தோழர். V. ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பொதுக்குழுவில் நமது மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில செயற்குழுவை சிறப்பாக நடத்துவது பற்றி தோழர்களிடம் கருத்துக்கள் கோரப்பட்டது. அதில் வருகின்ற நமது மாநில செயற்குழுவை சிறப்புடன் நடத்துவது என ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது. செயற்குழுவை நடத்துவதில் நிதி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு நமது சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஓய்வு பெற்ற அதிகாரிகளிடமிருந்து குறைந்தபட்சம் ரூபாய் 2000/- பெறுவது எனவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
எனவே அனைத்து தோழர் தோழியர்களின் முழு பங்களிப்போடு மாநில செயற்குழுவை சிறப்பாக்குவோம்.
நன்றி
தோழமையுடன்
ராமகிருஷ்ணன்.V
மாவட்ட செயலர்
AIBDPA
- புதுச்சேரி மாவட்டம்
0 Comments