Latest

10/recent/ticker-posts

7.9.2021 தார்ணா போராட்டம் - Confederation / NCCPA அறைகூவல் !

7.9.2021ல் தார்ணா போராட்டம் – Confederation / NCCPA அறைகூவல் !

  


தோழர்களே!

   மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனமும், NCCPAவும் இணைந்து சில முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து 7.9.2021 இன்று நாடு தழுவிய தார்ணா போராட்டத்திற்கான அறைகூவலை விடுத்துள்ளன.

கோரிக்கைகள் :

👉 1.1.2020 முதல் 30.6.2021 வரையிலான DA/DR நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும் !

👉 Covid-19 தொற்று ஏற்படுத்திய அனைத்து பாதிப்புக்கள் நீக்கப்பட வேண்டும். உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் !

👉 BSNL ஓய்வூதியதார்களுக்கு 1.1.2017 முதல் ஓய்வூதியம் மாற்றியமைக்கப்பட வேண்டும். PNB ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியம் திருத்தியமைக்கப்பட வேண்டும்.

தோழர்களே !

       அந்தந்த மாவட்டங்களில் Confederation-உடன் இணைந்து NCCPA மாவட்ட அமைப்புகள் தார்ணா போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும்.

          Confederation இல்லாத பகுதிகளில் NCCPA உறுப்பு சங்கங்கள் (AIPRPA & AIBDPA) இணைந்து தார்ணாவை நடத்திடுமாறு வேண்டுகிறோம்.

        சென்னையில் 7.9.2021, செவ்வாய், அன்று பிற்பகல் 1 மணியளவில் வருமானவரி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திட மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தமிழ் மாநிலக் குழு முடிவெடுத்துள்ளது.

         எனவே NCCPA உறுப்பு சங்கங்களைச் சார்ந்த (AIPRPA, AIBDPA & ITPA) சென்னை மாவட்ட நிர்வாகிகள், ஓய்வூதியர்கள் சென்னையில் நடைபெறவுள்ள மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

NCCPA Steering Committee தமிழ்நாடு

போராட்ட வாழ்த்துக்களுடன்,

தோழமையுள்ள,

P. மோகன்
மாநிலத் தலைவர்.

C. K. நரசிம்மன்
மாநில கன்வீனர்
NCCPA

 

 

 

Post a Comment

0 Comments