Latest

10/recent/ticker-posts

CoC சார்பாக சேலம் நகர கிளைகளின் இணைந்த மாநாடு !!!

 மாவட்ட மாநாடோ? என வியக்கும் வண்ணம், நடைபெற்ற இணைந்த கிளை மாநாடு !



                   BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, CoC சார்பா, சேலம் நகர கிளைகளின் இணைந்த மாநாடு, 31.10.2026 அன்று, சேலம் செவ்வாய் தொலைபேசி நிலைய கூட்ட அரங்கில், வெகு சிறப்பாக நடைபெற்றது. அமைப்பு ரீதியாக, BSNLEU கிளைகளின் 12வது மாநாடு, AIBDPA கிளைகளின், 3வது மாநாடு, TNTCWU கிளையின், 3வது மாநாடு என கூட்டாக நடத்தப்பட்டது.

              மாநாட்டிற்கு முறையாக, கிளை தலைவர்கள், தோழர்கள் B. வீரேஷ்குமார் (BSNLEU), A. மணி (AIBDPA), D. செந்தில்குமார் (TNTCWU) தலைமை குழுவாக, தேர்வு செய்யப்பட்டார்கள். முதல் நிகழ்வாக, சங்க கொடியை, தோழர் P. செல்வம் (TNTCWU) அவர்களின், விண்ணதிரும் கோணங்களுக்கு மத்தியில், தோழர் R. குழந்தைவேலு (AIBDPA) ஏற்றி வைத்தார்.

      பின் மாநாட்டு அரங்கில், தோழர் P. சந்திரன், (BSNLEU) அஞ்சலியுறை நிகழ்த்த, தோழர்கள் P. சம்பத், (AIBDPA), N. சிவகுமார் (BSNLEU) அனைவரையும் வரவேற்றார்கள். தலைவர்கள், தோழர்கள் கௌரவிப்பு நிகழ்விற்கு பின், தோழர் S. அழகிரிசாமி, மாநில அமைப்பு செயலர், AIBDPA, மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். தோழர் S. தமிழ்மணி, மாவட்ட செயலர், மாநாட்டு கருத்துரை வழங்கினார். தோழர் E. கோபால், மாநில உதவி செயலர், மாநாட்டு எழுச்சியுரை வழங்கினார். தோழர் S. ஹரிஹரன், மாவட்ட செயலர், மாநாட்டு பேருரை வழங்கினார்.

        ஆய்படு பொருள் ஏற்புக்கு பின், பொருளாய்வு குழுவில், இணைந்த செயல்பாட்டு அறிக்கை, சமர்ப்பிக்கப்பட்டது. பின் தனி தனியாக, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இரண்டும், ஏகமனதாக ஏற்கப்பட்ட பின், TNTCWU மாவட்ட செயலர் தோழர் M. செல்வம், BSNLEU தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் M. சண்முகம் வாழ்த்துரை வழங்கினார்கள்.

            மூன்று மாவட்ட செயலர்களும், அவரவர் சார்பு கிளை சங்கங்களின், புதிய நிர்வாகிகள் தேர்வை நடத்தினார்கள். 02.09.2026 அன்று நடைபெற்ற, BSNLEU மாவட்ட செயற்குழுவின் முன்மொழிவின்படி, சேலம் மெயின், செவ்வை, மெய்யனுர் கிளைகள் ஒரே கிளையாக, "சேலம் நகர கிளை" என்கிற பெயரில் இணைக்கப்பட்டது. AIBDPA சேலம் மெயின் மற்றும் மெய்யனுர் கிளைகள், TNTCWU சேலம் நகர கிளை என நான்கு கிளைகளுக்கு, புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். (முழுமையான பட்டியல் இணைப்பு)

               80 வயதை கடந்த AIBDPA தோழர்கள் N. V. சிவராஜ், மற்றும் ரத்தினம்  ஆகியோர் கௌரவபடுத்தபட்ட பின், CoC சார்பாக, பணியில் உள்ள தோழர்கள், ஓய்வூதியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கைகளை, மாநாட்டு தீர்மானங்களாக, மாநாடு, ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. (விவரங்கள் இணைப்பு)

        தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை, தோழர்கள் P. தங்கராஜு, DT., AIBDPA, N. பாலகுமார், DVP., BSNLEU, R. ரமேஷ், DT., BSNLEU ஆகியோர் வாழ்த்திய பின், தோழியர் C. லாவண்யா, ADS., BSNLEU நன்றி கூறி, மாநாட்டை முடித்து வைத்தார்.

        கொடிகள், தோரணங்கள், அரங்கத்தில் மாநாட்டிற்கு என பிரத்யேக, STAGE BACK DROP FLEX, அமைதியான இடம், இடையூறு இல்லாமல், இருக்கைக்கே தேநீர், பலகாரம், வீட்டு சமையல் போன்ற சுவையான உணவு, அன்பான உபசரிப்பு என, சிறப்பான ஏற்பாடுகள் செய்த, வரவேற்பு குழு தோழர்களின் பணி பாராட்டுக்குரியது. 

             வயதை பொருட்படுத்தாமல் கலந்து கொண்ட ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், சொந்த விடுப்பில், முன் அனுமதியில், மாநாட்டில் கலந்து கொண்ட, BSNLEU / TNTCWU தோழர்கள், ஒவ்வொருவரும் வெவ்வேறு தலைப்புகளில், குறைந்த மணி துளிகளில், நிறைவான, தலைவர்களின் முதிர்ச்சியான உரை என, பல சிறப்பு அம்சங்களை, இந்த மாநாடு பெற்றுள்ளது என்று சொன்னால், அது மிகையல்ல.  கிளை மாநாட்டில், 100க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் கலந்து கொண்டது போற்றுதலுக்குரியது. 

       செலவுகள் துவங்கி, செயல்பாடுகள் வரை, அவரவர் சக்திக்கேற்ப, BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்கங்களும், பங்களிப்பு செய்துள்ளது, வர்க்க குணாம்சத்திற்கு, புதிய உதாரணத்தை, புதிய சகாப்தத்தை, இந்த மாநாடு  துவக்கியுள்ளதாக, மாவட்ட CoC கணிக்கிறது. கிளை சங்கங்களுக்கு. பாராட்டுக்கள். 

ஒற்றுமை ஓங்கட்டும் ! 

உறுப்பினர் நலன், சிறக்கட்டும்!! 

இயக்கங்கள் வெல்லட்டும்!!! 


தோழமையுடன், 
S. தமிழ்மணி, தலைவர் 
S. ஹரிஹரன், கன்வீனர் 
M. செல்வம், இணை கன்வீனர், 
CoC சேலம்

Post a Comment

0 Comments