AIBDPA TN
ஒப்பந்த ஊழியர் சங்க அகில இந்திய மாநாடு - 03.10.2026 – புதுதில்லி
தோழர்களே,
AICCWF காண்ட்ராக்ட் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு 03.10.2026 அன்று புதுதில்லியில் நடைபெற உள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிரந்தரமற்ற பணிச்சூழலில், மிகக் குறைந்த ஊதியத்தில் உழைத்து வரும் காண்ட்ராக்ட் ஊழியர்கள், தங்களுடைய உரிமைகளுக்காகவும், நியாயமான ஊதியம், பணிப்பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பிற்காகவும் தொடர்ந்து தொழிற்சங்கப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டிலிருந்து அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட தோழர்கள் இந்த அகில இந்திய மாநாட்டில் சார்பாளர்களாக பங்கேற்க உள்ளனர் என்பது மிகவும் பெருமைக்குரியதாகும்.
குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் இந்தத் தோழர்கள், தங்களுடைய சொந்த செலவில் நீண்ட தூரம் பயணம் செய்து மாநாட்டில் பங்கேற்று, தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்த முன்வருவது பாராட்டத்தக்கது.
இத்தகைய போராடும் தொழிலாளர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்வது, ஒரு நிதியுதவி மட்டுமல்ல; அது தொழிலாளர் வர்க்க தோழமையை வெளிப்படுத்தும் செயல் !
எனவே, தமிழ்நாடு மாநில சங்கத்தின் சார்பில், ஓய்வூதிய தோழர்கள் தங்களால் இயன்ற அளவு தாராளமாக நிதியுதவி வழங்கி, காண்ட்ராக்ட் ஊழியர்கள் அகில இந்திய மாநாட்டில் சிறப்பாகப் பங்கேற்க உதவிடுமாறு தோழமையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.
ஒவ்வொரு மாவட்ட சங்கமும் இந்தப் பணியை முன்னெடுத்து, தங்களது மாவட்டத்தில் உள்ள ஓய்வூதிய தோழர்களை அணுகி, நிதி வசூல் செய்து காண்ட்ராக்ட் ஊழியர் மாவட்ட சங்கம் மூலமாக வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
காண்ட்ராக்ட் ஊழியர்களின் இயக்கத்திற்கு நமது தோழமை கரங்களை நீட்டுவோம்!
தொழிலாளர் ஒற்றுமையை வலுப்படுத்துவோம் !
அகில இந்திய மாநாட்டை வெற்றிகரமாக்குவோம் !
R. ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
Tamilnadu
13.8.26
0 Comments