Latest

10/recent/ticker-posts

5வது அகில இந்திய மாநாட்டு நன்கொடை மற்றும் மாவட்ட செயற்குழுக் கூட்டங்கள்

 AIBDPA TN

 அகில இந்திய மாநாட்டு நன்கொடை மற்றும் மாவட்ட செயற்குழுக் கூட்டங்கள்

தோழர்களே, 

       16.08.25 அன்று கோவையில் நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்திலும் 5வது அ.இ. மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பு கூட்டத்திலும் நாம் மாவட்டங்களுக்கு அகில இந்திய மாநாட்டு நிதிக்கான இலக்கை தீர்மானித்தோம். அதை நிறைவேற்ற மாவட்ட சங்கங்கள் உடனடியாக தங்களது மாவட்டத்தில் செயற்குழு அல்லது விரிவடைந்த செயற்குழு கூட்டங்களை நடத்தி திட்டமிட வேண்டும் என்றும், வேண்டுகோள் வைக்கப்பட்டு இருந்தது. 

         அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட மாவட்டங்களில் செயற்குழுக் கூட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. மீதமுள்ள மாவட்டங்களிலும் செப்டம்பர் மாத  இறுதிக்குள் தங்களது மாவட்டங்களில் செயற்குழுக் கூட்டங்களை நடத்திட வேண்டும்  என மாநிலச் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

கோவை மாநில செயற்குழுவிற்குப் (16/8/25) பின், நடைபெற்ற மாவட்ட செயற்குழுக் கூட்டங்கள் ,

1) புதுச்சேரி 21/8

2) குன்னூர் 28/8 (on-line)

3) கடலூர் 31/8

4) சேலம் 1/9

5) கும்பகோணம் 6/9

6) ஈரோடு 8/9

7) நாகர் கோவில் 11/9

8) திருச்சி 13/9

நடக்க இருப்பவை 

1) விருதுநகர் 16.9.25 (கருத்தரங்கம்) 

இன்னும் 9 மாவட்டங்கள் கூட்டங்கள் நடத்த வேண்டும்.

மாவட்டத் தலைமை இடங்களில் அல்லது மையப்படுத்தப்பட்ட இடங்களில் கருத்தரங்கம் நடத்துவதற்கும் தீர்மானித்து இருக்கிறோம். 

இதுகுறித்தும் மாவட்டங்கள் தங்களுடைய கூட்டங்களில் விவாதித்து கருத்துக் கூற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம். 

தோழமையுடன்,  R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்.
14.9.25

Post a Comment

0 Comments