எழுச்சியுடன் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட 5வது மாவட்ட மாநாடு
October 26, 2021
எழுச்சியுடன் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட 5வது மாவட்ட மாநாடு
தூத்துக்குடி மாவட்டச் சங்கத்தின் 5வது மாவட்ட மாநாடு 26-10-2021 அன்று தூத்துக்குடியில் மாசிலாமணிபுரம் 3வது தெருவில் உள்ள (தோழர். P. C. வேலாயுதம் அரங்கு) தோழர். K. பொன்னையா நினைவரங்கில் வைத்து காலை 1030 மணியளவில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர். T. சுப்பிரமணியன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தேசியக் கொடியை மூத்த தோழர். C. செல்லையாவும் சங்கக்கொடியை மாநிலத் தலைவர் தோழர். C. K. நரசிம்மனும் ஏற்றி வைத்தனர். அஞ்சலி தீர்மானத்தை தோழர். P. அய்யாபிள்ளை நிறைவேற்றினார். வந்திருந்த அனைவரையும் வரவேற்று தோழர். K. சுப்பையா வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட மாநாட்டை துவக்கி வைத்து மாநிலத் தலைவர் தோழர். C.K. நரசிம்மன் துவக்க உரை ஆற்றினார். மாநில உதவிச் செயலர் தோழர் A. குடியரசு, விருதுநகர் மாவட்டச் செயலர் தோழர். M. அய்யாசாமி நெல்லை மாவட்டத் தலைவர் தோழர். S. முத்துசாமி, TNTCWU மாவட்டச் செயலர் தோழர். E. ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அகில இந்திய உதவித் தலைவர் தோழர். S. மோகன்தாஸூம் மாநில பொருளாளர் தோழர். S. நடராஜாவும் சிறப்புரை ஆற்றினர்.பின்னர் நடைபெற்ற பொருளாய்வுக்குழுவில் மாவட்டச் செயலர் தோழர்.P. ராமர், செயல்பாட்டு அறிக்கையையும் மாவட்டப் பொருளாளர் தோழர். K. கணேசன் நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்தனர். நீட் தேர்வை ரத்து செய்ய கோரி SFI தோழர்கள் நடத்தும் சென்னை கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டதிற்கு நிதி கோரிக்கை வைத்தனர். மாநாட்டில் கலந்து கொண்ட தோழர்கள் அவர்களுக்கு நிதியாக ரூபாய் 2945/- வழங்கினர். தாராள நிதி வழங்கிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு திருச்செந்தூர் கிளைச் செயலர் தோழர். V. குணசேகரன், கோவில்பட்டி கிளைச் செயலர் தோழர். P. முத்துராமலிங்கம் வாழ்த்துரை வழங்கினர். பொருளாய்வுக் குழுவில் தோழர்கள். T.K. ஶ்ரீனிவாசன், கோலப்பன், R.M.கிறிஸ்டோபர், A.சந்திரசேகர் பேசினர். மாவட்டச் செயலரின் நிறைவுரைக்குப் பின் செயல்பாட்டு அறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கை ஏகமதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வை மாநிலத் தலைவர் CKN நடத்தினார். கீழ்க்கண்ட தோழர்கள் மாவட்டச் சங்க நிர்வாகிகளாக ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
*மாவட்டத் தலைவர் : T. சுப்பிரமணியன் STM TT*
மாவட்ட உதவித் தலைவர்கள் : 1) M. முத்தையா TM TT 2) A.சந்திரசேகர் STS TCH 3) S. முருகேசன் TM KVT 4) P. இசக்கிமுத்து TM SAU
*மாவட்டச் செயலர் : P. ராமர் STS TT*
மாவட்ட உதவிச் செயலர்கள் : 1) K. சுப்பையா TTA KVT 2) V.குணசேகரன் SSS TCH 3) K. கோலப்பன் SDE KVT 4) P.அய்யாப்பிள்ளை STS TT 5) S. ஆறுமுகம் TM KVT
*மாவட்டப் பொருளாளர் : K. கணேசன் TM TT*
மாவட்ட அமைப்புச் செயலர்கள் : 1) A.ஜேசுதாசன் TM TT 2) P. ராமச்சந்திரன் SDE TT 3) மேரி சற்குணசிங் SSS TT 4) P. மோகன் TM TT 5) K. ராமகிருஷ்ணன். TM SKM
தணிக்கையாளராக தோழர். T.K. ஶ்ரீனிவாசன் நியமணம் செய்யப்பட்டார்.
மாநாட்டில் தலைவர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தப்பட்டது. 13 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக மாவட்டப் பொருளாளர் தோழர். K. கணேசன் நன்றி கூற மாநாடு நிறைவு பெற்றது.
சிறப்பான ஏற்பாடுகளோடு மாநாட்டை சிறப்பாக நடத்திட்ட மாவட்டச் சங்க தோழர்களையும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்டச் சங்க நிர்வாகிகளையும் மாநிலச் சங்கம் மனதார பாராட்டி வாழ்த்துகிறது.
0 Comments