• BSNLEU அலுவலக தாக்குதலைக் கண்டித்து 24-08-2016ல் கண்டன ஆர்ப்பாட்டம்

  கொல்கத்தாவில் BSNLEU அலுவலகம் மீது தாக்குதல்

  திரிணாமுல் குண்டர்கள் அராஜகம்.

             கடந்த 19-08-2016 அன்று கொல்கத்தாவில் மேற்கு வங்க BSNLEU மாநில அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய திரிணமுல் கட்சியினரைக் கண்டித்தும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் 24-08-2016ல் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட BSNLEU மத்தியசங்கம் அறைக்கூவல் விட்டுள்ளது.

           AIBDPA தமிழ் மாநிலச்சங்கம் இதனை வன்மையாக கண்டிப்பதுடன், AIBDPA மாவட்டச் செயலர்கள் உரிய கவனம் செலுத்தி பெருவாரியான ஓய்வூதியர் தோழர்களை கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள AIBDPA தமிழ் மாநிலச்சங்கம் வேண்டுகிறது.

 • புதிய CCA திரு. டாக். நிரஞ்சனாவுடன் மாநிலச் செயலர் சந்திப்பு

            22-08-2016 அன்று தமிழ் மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன், மாநில உதவிச் செயலரும் மாவட்டத் தலைவருமான தோழர். S. நடராஜா, சென்னை மாவட்டச் செயலர் தோழர். T. கோதண்டம் மற்றும் சென்னை மாவட்டப் பொருளாளர் தோழர். N. சாயிராம் ஆகியோர் இன்று புதிதாக பதவியேற்ற CCA திரு. டாக். நிரஞ்சனா அவர்களை சந்தித்து வாழ்த்து கூறினர். மேலும் 78.2சத பஞ்சப்படி இணைப்பு உத்தரவினை விடுபட்ட ஓய்வூதியர்களுக்கு விரைவில் அமுல்படுத்திட வலியுறுத்தி கடிதம் கொடுத்தனர்.  CCA அவர்கள் மேற்கண்ட பிரச்சனையில் உரிய கவனம் செலுத்துவதாகஉறுதியளித்தார். CCAயுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது.

 • சுதந்திரதின வாழ்த்துக்கள்

  அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்

  images (1)

 • BSNL சுதந்திர தினச்சலுகை அறிவிப்பு

  அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தரைவழி தொலைப்பேசியின் அழைப்புகள் இலவசம்

  புதுடில்லி: சுதந்திரதினமான ஆகஸ்ட் 15-ம் தேதி முதல்  BSNL வாடிக்கையாளர்கள் லேன்ட் லைன் வாயிலாக இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் அனைத்து உள்நாட்டு அழைப்புகளும் இலவச அழைப்புகளாக கருதப்படும் என இந்திய அரசுக்கு சொந்தமான BSNL அறிவித்துள்ளது.

  இதுதொடர்பாக, டில்லியில் உள்ள BSNL வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ஏற்கனவே, லேன்ட் லைன் வாயிலாக இதர தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை செய்யும் அனைத்து அழைப்புகளையும் இலவச அழைப்புகளாக BSNL  கணக்கிட்டு வருகிறது.

  இந்நிலையில், வாடிக்கையாளர்கள் நலன்கருதி சுதந்திர தினமான வரும் 15-ம் தேதியில் இருந்து பி.எஸ்.என்.எல். லேன்ட் லைன் இணைப்பு வாயிலாக நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கும் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் உள்நாட்டு அழைப்புகள் யாவும் இலவச அழைப்புகளாக கருதப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் சுதந்திரதின சிறப்பு சலுகையாக ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து நவம்பர் 14-ம் தேதிவரை புதிய லேன்ட் லைன் இணைப்புகளை பெறும் வாடிக்கையாளர்களிடம் நிர்மாணக் கட்டணம் (இன்ஸ்ட்டலேஷன்) கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

  குறைந்தபட்சமாக வெறும் 49 ரூபாய் மாத கட்டணத்தில் இதர வாடிக்கையாளர்களை போல் இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை இலவச அழைப்பு சலுகையை இவர்களும் பெற முடியும் எனவும் அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 • 2016 ஆகஸ்ட் 10 பேரணி – AIBDPA தோழர்கள் பங்களிப்பு

           BSNLலின் சக்திமிக்க பேரணி நாடுதழுவிய அளவில் சிறப்பு

         வாடிக்கையாளர் மகிழ்விப்பு இயக்கம், புன்னகையோடு சேவை போன்ற இயக்கங்களை BSNL நிர்வாகமும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து வெற்றிகரமாக நடத்தியதன் விளைவாக BSNLலின் லாபம் அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக BSNL கருவிகளையும், திட்டங்களையும் மக்களிடம் விளம்பரப் படுத்துவதற்காக 2016 ஆகஸ்ட் 10 அன்று பேரணிகளை நாடு முழுவதும் நடத்துவதற்கு BSNL நிர்வாகமும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பும் மீண்டும் கூட்டாக முடிவு செய்து 10-08-2016 அன்று நாடு முழுவதும் வெற்றிகரமாக பேரணியை நடத்தினர். தூத்துக்குடியில் 11-08-2016ல் பேரணி நடைபெற்றது.

  IMG-20160811-WA0022

      மேற்கண்ட பேரணிகளில் வேலூர், கோவை, பாண்டி, மதுரை, திருச்சி, விருதுநகர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நமது AIBDPA தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பேரணியில் கலந்து கொண்ட தோழர்களை தமிழ்மாநிலச் சங்கம் பாராட்டுகிறது.

 • மாவட்டச்செயலர்கள் கவனத்திற்கு

  78.2 % IDA நிலுவைத் தொகை பெற விரைந்து நடவடிக்கை எடுத்திட பணி செய்வோம்.

              78.2 % IDA நிலுவைத் தொகை உத்தரவு அனைத்து மாவட்டங்களுக்கும் கிடைத்திருப்பதால் மாவட்ட அளவில் பணிகளை துவக்கிட நமது மாவட்டச் செயலர்கள் மாவட்ட பொதுமேலாளரை சந்தித்து பணிகளை விரைவுபடுத்திட ஏற்பாடுகளை செய்திட மாநிலச்சங்கம் வேண்டுகிறது.

 • வெற்றிவிழா சிறப்புக்கூட்டங்கள் ஈரோடு, சேலம், திருச்சி

  AIBDPA GS தோழர். K.G. ஜெயராஜ், CS தோழர் C. K. நரசிம்மன், CP  தோழர். S.மோகன்தாஸ் சிறப்புரை. 

   IMG-20160731-WA0011IMG-20160731-WA0008IMG-20160731-WA0003

  AIBDPA வெற்றி விழா சிறப்புக்கூட்டம் 28.7.2016 அன்று ஈரோட்டில் மாவட்டத்தலைவர் தோழர். N.சின்னையன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர்.  N. குப்புசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

  200 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் AIBDPA அகில இந்திய பொதுச்செயலர் தோழர். K.G. ஜெயராஜ், மாநில செயலர் தோழர் C. K. நரசிம்மன் மற்றும் மாநில தலைவர் தோழர். S.மோகன்தாஸ் சிறப்புரை ஆற்றினர்.  BSNLEU ஈரோடு மாவட்டச் செயலர் தோழர். L. பரமேஸ்வரன், AIRPPA மாவட்டச்செயலர் N. ராமசாமி, AIBDPA மாநில துணைச் செயலர் தோழர். சின்னசாமி  உட்பட தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

            மாவட்ட பொருளர் தோழர். அய்யாசாமி நன்றி கூறினார். பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி விழா சிறப்பாக நடைபெற்றது.

  சேலத்தில் சிறப்புக்கூட்டம் 29.7.2016

  AIBDPA வெற்றி விழா சிறப்புக்கூட்டம் 29.7.2016 அன்று சேலத்தில் மாவட்டத்தலைவர் தோழர். N. ராமசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர்.  N. பொன்னுவேல் வரவேற்புரை நிகழ்த்தினார்.

   சிறப்பாக நடைபெற்ற கூட்டத்தில் AIBDPA அகில இந்திய பொதுச்செயலர் தோழர். K.G. ஜெயராஜ், மாநில செயலர் தோழர் C. K. நரசிம்மன் மற்றும் மாநில தலைவர் தோழர். S.மோகன்தாஸ் சிறப்புரை ஆற்றினர்.  AIBDPA ஈரோடு மாவட்டச் செயலர்  தோழர்.  N. குப்புசாமி AIBDPA மாநில துணைச் செயலர் தோழர். சின்னசாமி  உட்பட தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

 • ARREARS CALCULATOR FOR PRE 2007 PENSIONERS

  A READY RECKONER FOR CALCULATING THE ARREARS FOR THE PRE 2007 PENSIONERS IS GIVEN BELOW.. IT IS PREPARED FOR AIBDPA BY COM. V.K.MURALIDHARAN, AO, O/O THE CGM, TAMIL NADU, CHENNAI.
  CLICK ON THE GIVEN NAME AND PRE 2007 BASIC PENSION AND REPLACE BOTH WITH YOURS. THEN CLICK ON TOTAL ARREARS.

  Pension_Calculator

 • 29-07-2016ல் நடைபெறும் வங்கி ஊழியர் போராட்டம் வெல்க !

  பத்துலட்சம் வங்கி ஊழியர்கள் நடத்தும் வேலைநிறுத்த போராட்டம் வெல்க !!!

  •  வங்கிகளை தனியார் மயப்படுத்தாதே !

  • வங்கிகளை இணைக்காதே !

  • மக்கள் சேமிப்புகளின் வட்டிவிகிதத்தை குறைக்காதே ! உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம்.

   இந்தியாவின் அரசுடமை வங்கிகளில் மொத்தம் 116 லட்சம் கோடி ரூபாய்கள் புழக்கத்தில் உள்ளன. இதில் 13 லட்சம் கோடி பெருநிறுவனங்களின் வாராக்கடன்களாக உள்ளன.

   மக்கள் பணம் 116 லட்சம் கோடியைத் தனியாருக்குத்தாரைவார்த்திட மோடி தலைகீழாய் நிற்கிறார்.

   வங்கிஊழியர்கள் இந்த மக்கள் பணத்தைப் பாதுகாக்க மக்களுக்காகப் போராடுகிறார்கள்.

  மக்கள் துணை நிற்போம் !!!

 • உற்சாகமாக நடைபெற்ற 4வது கோவை மாவட்ட மாநாடு.

  .facebook_1469641388376.facebook_1469641550501   IMG-20160728-WA0004

              250க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உற்சாகமாக கலந்துகொண்டு சிறப்பித்த 4வதுகோவை மாவட்ட மாநாடு 27-07-2016 அன்று மாவட்டத்தலைவர் தோழர். V. சுப்பிரமணியன் தலைமையில் கோவை திவ்யாடே ஹாலில் வைத்து நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் மாவட்டச் செயலர் தோழர். L. உமாபதி வரவேற்றார்.

                    மாநாட்டை துவக்கிவைத்து AIBDPA பொதுச்செயலர் தோழர். K.G. ஜெயராஜ் பேசினார். 78.2 % பஞ்சப்படி இணைப்பின் உத்தரவு பெறுவதில் இருந்த தடைகள், அதன் வெற்றி, 60:40ல் இருந்த நடைமுறைச் சிக்கல், அதனை மாற்றி 100சதமும் DOTயே ஏற்றுக்கொள்ளும் இன்றைய உத்தரவு, 7வது சம்பள கமிஷன் சிபாரிசுகள் அதில் உள்ள ஓய்வூதியர்களின் பணபலன்களின் பிரச்சனைகள் மற்றும் 02-09-2016ல் நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தம் என அனைத்து விபரங்களையும் விரிவாக தனது துவக்க உரையில் எடுத்துரைத்தார். சிறப்புரையாக மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன், மாநிலத்தலைவர் தோழர். S.மோகன்தாஸ் பேசினர். 

  IMG-20160728-WA0019IMG-20160728-WA0029IMG-20160728-WA0017

          BSNLEU மாவட்டச் செயலர் தோழர். C.ராஜேந்திரன், SEWA மாவட்டச் செயலர் தோழர். பிரசன்னன், AIPRPA தோழர். கருனாநிதி, TNGTA தோழர். S. சந்திரன், AIBDPA ஈரோடு மாவட்டச் செயலர் தோழர். N. குப்புசாமி, AIBDPA வேலூர் மாவட்டச் செயலர் தோழர். B. ஜோதி சுதந்திரநாதன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். தோழர். பங்கஜவல்லி நன்றிகூறி மாநாட்டை நிறைவு செய்தார்.

           ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவுசெலவு கணக்குகள் விவாதங்களுக்கு பின் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய மாவட்டத் தலைவராக தோழர். V. சுப்பிரமணியன், மாவட்டச் செயலராக தோழர். P.B. ராதாகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளராக தோழர். M. வெங்கிடராஜலூ உள்ளிட்ட 17 தோழர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

          மாநாட்டை சிறப்பாக நடத்திய கோவை தோழர்களுக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளையும் மாநிலச் சங்கம் பாராட்டி  வாழ்த்துகிறது.